அம்பயரின் அலட்சியத்தால் அவுட்டான கெய்ல்.. கெய்லை செம கடுப்பாக்கிய கள நடுவர்கள்

By karthikeyan VFirst Published Jun 7, 2019, 10:52 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அம்பயர்கள் பாடாய் படுத்திவிட்டனர். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அம்பயர்கள் பாடாய் படுத்திவிட்டனர். 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் ஸ்மித் - அலெக்ஸ் கேரியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர குல்டர்நைலின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், பூரான், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸின் தொடக்கத்திலிருந்தே அம்பயர்களின் அட்டூழியம் அதிகமாக இருந்தது. ஒரே ஓவரில் 2 முறை கெய்லுக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டு, டி.ஆர்.எஸ் மூலம் களநடுவரின் தீர்ப்பு தவறு என்பதை நிரூபித்து தனது இன்னிங்ஸை காப்பாற்றிக்கொண்டார் கெய்ல்.

ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் அம்பயர் எல்பிடள்யூ கொடுக்க, அதிருப்தியடைந்த கெய்ல் சற்றும் யோசிக்காமல் ரிவியூ கேட்டார். தேர்டு அம்பயர் ஆராய்ந்ததில் பந்து ஸ்டம்பை மிஸ் செய்ததால் அவுட்டில்லை என்றானது. கெய்ல் களத்தில் நீடித்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த கெய்ல், ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கெய்ல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இந்த எல்பிடபிள்யூவிற்கும் கெய்ல் ரிவியூ கேட்டார். பாதி பந்து ஸ்டம்பில் பட்டதால் அது அம்பயர் கால் என்பதால், கள நடுவரின் தீர்ப்புப்படி கெய்ல் வெளியேறினார். 

ஆனால் கெய்ல் அவுட்டானதற்கு முந்தைய பந்து நோ பால். அதை அம்பயர் கவனிக்காததால் அதற்கு நோ பால் கொடுக்கவில்லை. ஒருவேளை அந்த பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், கெய்ல் அவுட்டான அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டாக இருந்திருக்கும். அப்படி பார்த்தால் கெய்ல் அவுட்டாகியிருக்கமாட்டார். ஆனால் அம்பயர்கள் நேற்று கெய்லை பாடாய் படுத்தி அனுப்பிவிட்டனர். கெய்லை அவுட்டாக்கியது ஸ்டார்க் என்று சொல்வதை விட அம்பயர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 
 

click me!