மண்டையில் அடி வாங்கிய அம்பயர் மரணம்.. கிரிக்கெட் உலகமே சோகத்தில் மூழ்கியது

Published : Aug 16, 2019, 01:44 PM IST
மண்டையில் அடி வாங்கிய அம்பயர் மரணம்.. கிரிக்கெட் உலகமே சோகத்தில் மூழ்கியது

சுருக்கம்

கிரிக்கெட்டில் அரிதுனும் அரிதாக சில மோசமான காயங்களும் சம்பவங்களும் ஏற்படும். வீரர்களுக்கோ அம்பயர்களுக்கோ படுமோசமாகவோ அல்லது தலையிலோ காயம் ஏற்படுவது மிகவும் அரிது. 

கிரிக்கெட்டில் அரிதுனும் அரிதாக சில மோசமான காயங்களும் சம்பவங்களும் ஏற்படும். வீரர்களுக்கோ அம்பயர்களுக்கோ படுமோசமாகவோ அல்லது தலையிலோ காயம் ஏற்படுவது மிகவும் அரிது. ஆனால் அதுபோன்ற காயங்கள் சில நேரங்களில் சோகமான சம்பவமாக முடிந்துவிடும். 

அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெம்ப்ரோக்‌ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் அம்பயர் ஜான் வில்லியம்ஸ். பெம்ப்ரோக் மற்றும் நார்பெர்த் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த டிவிசன் போட்டிக்கு அம்பயரிங் செய்து கொண்டிருந்த போது, ஜான் வில்லியம்ஸுக்கு தலையில் பந்து பட்டது. 

இதையடுத்து அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், கார்டிஃபில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சுயநினைவை இழந்து கோமாவிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், அம்பயர் ஜான் வில்லியம்ஸ் நேற்று உயிரிழந்துவிட்டார். அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரு மாதத்திற்கு முன் தலையில் அடிபட்ட நிலையில், அம்பயர் இறந்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. . 80 வயதிலும் வீட்டில் ஓய்வெடுக்காமல் களத்திற்கு வந்து அம்பயரிங் செய்த ஜான் வில்லியம்ஸுக்கு நேர்ந்தது மிகப்பெரிய சோகம்தான்.

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!