என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா..! சித்தார்த் கவுலை கவர் செய்ய சொன்ன அம்பயர்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 30, 2021, 2:58 PM IST
Highlights

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பிசிசிஐ சின்னத்துடன் கூடிய ஹெல்மெட்டை அணிந்திருந்த சித்தார்த் கவுலை எச்சரித்து, அதை மறைக்க அம்பயர் வலியுறுத்திய பின்னர், அதை மறைத்தார் சித்தார்த் கவுல்.
 

உள்நாட்டு தொடர்களில் பிசிசிஐ லோகோவுடன் கூடிய எதையுமே பயன்படுத்தக்கூடாது என்பது விதி. அதனால் தான், இந்திய அணியில் ஆடும் வீரர்கள், உள்நாட்டு போட்டிகளில் ஆடும்போது தங்களது ஹெல்மெட்டில் இருக்கும் பிசிசிஐ லோகோவை மறைத்தபடி ஆடுவார்கள்.

அதையும் மீறி பிசிசிஐ லோகோவுடன் கூடிய ஹெல்மெட் அணிந்து ஆடும் வீரர்களை அம்பயர்கள் எச்சரித்து, அதை மறைக்க அறிவுறுத்திவிடுவார்கள். வீரர்கள் யாரும் பிசிசிஐ சின்னத்துடன் கூடிய ஹெல்மெட்டையோ வேறு எதையுமோ பயன்படுத்தக்கூடாது; மீறி பயன்படுத்தினால் அதை மாற்றவோ அல்லது மறைக்கவோ அறிவுறுத்தலாம்.

அந்தவகையில், பஞ்சாப் மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதி அரையிறுதி போட்டியில் பஞ்சாப் அணி வீரர் சித்தார்த் கவுல் பிசிசிஐ சின்னத்துடன் கூடிய ஹெல்மெட்டுடன் களத்திற்கு வந்தார். அவரை களநடுவர்கள் எச்சரித்து, பிசிசிஐ லோகோவை மறைக்கும்படி அறிவுறுத்திய பின்னர் அதை செய்தார். அந்த வீடியோ இதோ..

pic.twitter.com/W2p4bA1uL0

— Simran (@CowCorner9)

இந்த விதி வீரர்களுக்கும் தெரியும். ஆனால் தெரிந்தும் இதுபோன்று நடந்துகொள்கின்றனர்.
 

click me!