#BBL ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் சில நொடிகள் ஸ்தம்பிக்க வைத்த லாஃப்லினின் கேட்ச்..! வியக்கவைக்கும் வீடியோ

By karthikeyan VFirst Published Jan 29, 2021, 8:48 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் எலிமினேட்டர் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் வீரர் மைக்கேல் நெசெர் அடித்த பந்தை அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் வீரர் லாஃப்லின் பிடித்த கேட்ச் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களையும் அந்த கேட்ச்சின் வீடியோவை பார்ப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

பிக்பேஷ் லீக்கின் எலிமினேட்டர் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸும் பிரிஸ்பேன் ஹீட்டும் மோதின. பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் வெறும் 130 ரன்கள் மட்டுமே அடித்தது. 131 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் பிரிஸ்பேன் பேட்டிங்கின்போது, அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் வீரர் மைக்கேல் நெசெர் அடித்த பந்தை லாஃப்லின் மின்னல் வேகத்தில் பறந்து சென்று பிடித்த கேட்ச்சின் வீடியோ செம வைரலாகிவருகிறது.

18வது ஓவரின் 3வது பந்தில் ஃபிலிப் சால்ட்டை வீழ்த்தினார் லபுஷேன். இதையடுத்து களத்திற்கு வந்த மைக்கேல் நெசெர், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை தனது முதல் பந்தாக எதிர்கொண்டார். லபுஷேன் ஆஃப் திசையில் வீசிய லோ ஃபுல் டாஸை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார் நெசெர். லாங் ஆனில் ஃபீல்டிங் நின்ற லாஃப்லின், அதிவேகமாக ஓடிச்சென்று சரியான டைமிங்கில் டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச்சை கண்டு ஒட்டுமொத்த ஸ்டேடியமே ஸ்தம்பித்து நின்றது. அந்த கேட்ச்சை நேரடியாக பார்த்த பார்வையாளர்களும், அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
 

INCREDIBLE BEN LAUGHLIN! | pic.twitter.com/NfDjV0wlds

— cricket.com.au (@cricketcomau)
click me!