எனக்கு ரொம்ப பிடித்த பேட்ஸ்மேன்கள் 2 பேர்..! 2 பேருமே இந்தியர்கள் தான்.. உமர் குல் ஓபன் டாக்

Published : Jun 26, 2020, 09:03 PM IST
எனக்கு ரொம்ப பிடித்த பேட்ஸ்மேன்கள் 2 பேர்..! 2 பேருமே இந்தியர்கள் தான்.. உமர் குல் ஓபன் டாக்

சுருக்கம்

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர் உமர் குல், தனக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.   

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர் உமர் குல், தனக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்று தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட அணியாக திகழ்ந்திருக்கிறது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆசிஃப், முகமது சமி, முகமது ஆமீர், வஹாப் ரியாஸ், உமர் குல் ஆகிய பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொடுத்த நாடு பாகிஸ்தான். 

அந்தவகையில், பாகிஸ்தானின் சிறந்த பவுலர்களில் ஒருவரான உமர் குல், பாகிஸ்தான் அணிக்காக 2003ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். 47 டெஸ்ட், 130 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் உமர் குல் ஆடியுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான உமர் குல், கிரிக்கேஸ்ட் என்ற நிகழ்ச்சியில் தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள் குறித்து பேசிய உமர் குல், முன்பெல்லாம் சச்சின் டெண்டுல்கரைத்தான் ரொம்ப பிடிக்கும். இப்போது விராட் கோலி. கடந்த 4-5 ஆண்டுகளாக விராட் கோலி மிகவும் சிறப்பாக ஆடிவருகிறார். அவர் தான் எனக்கு ரொம்ப பிடித்த பேட்ஸ்மேன். கோலி அவரை முழுவதுமாக தகவமைத்து கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் அவரது அணுகுமுறை முற்றிலுமாக மாறியுள்ளது. அபாரமாக ஆடுகிறார். அவர் பேட்டிங் ஆடுவதை ரசித்து பார்ப்பேன் என்று உமர் குல் தெரிவித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி, 3 விதமான போட்டிகளிலும் அருமையாக ஆடி அசத்திவருகிறார். 70 சர்வதேச சதங்களுடன், அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் பாண்டிங்கிற்கு அடுத்து 3ம் இடத்தில் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால் பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் பிடித்துவிடுவார் கோலி. விராட் கோலி அவரது கிரிக்கெட் கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் ஆகிய 2 சாதனைகளையுமே முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!