அண்டர் 19 உலக கோப்பை ஃபைனல்.. வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Feb 9, 2020, 1:46 PM IST
Highlights

அண்டர் 19 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் வங்கதேச அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. 
 

அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்த தொடர் முழுவதும் அபாரமாக ஆடிய இந்திய அணி இறுதி போட்டியில் வங்கதேசத்துடன் ஆடிவருகிறது. 

லீக் சுற்றில் இலங்கை, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என மோதிய அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தான்  அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசால்ட்டாக அடித்து துவம்சம் செய்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. தொடர்ச்சியாக 3வது முறை அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் இடையேயான இறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து இந்திய அணி பேட்டிங் ஆடிவருகிறது. 

செம ஃபார்மில் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் சதமடித்து அசத்தினார். எனவே இறுதி போட்டியிலும் அவரிடமிருந்து ரசிகர்களும் அணி நிர்வாகமும் பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறந்து விளங்குவதால், இந்த முறையும் இந்திய அணி கோப்பையை வெல்வது உறுதி. 2018ம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பையும் இந்திய அணி தான் வென்றது. பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி அந்த கோப்பையை வென்றது. 

click me!