இப்படிலாம் ஒரு கோச் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்.. தோல்விக்கு பின் கண்ணீர் விட்டு அழுத டாம் மூடி.. வீடியோ

By karthikeyan VFirst Published May 10, 2019, 12:36 PM IST
Highlights

ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தோற்றதால், அணியின் பயிற்சியாளர் அழுதது இதுவே முதன்முறையாக இருக்கும். 
 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் முதலிரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின. இதில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

எலிமினேட்டர் போட்டியில் டெல்லியும் சன்ரைசர்ஸும் மோதின. இந்த போட்டியில் வென்ற டெல்லி அணி, முதல் தகுதிச்சுற்றில் தோற்ற சிஎஸ்கேவுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் மோதுகிறது. அந்த போட்டியில் வெல்லும் அணிதான் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும்.

இந்நிலையில், எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த போதிலும் மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தியதோடு சன்ரைசர்ஸ் பவுலர்கள் சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

டெல்லி அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. இதை சன்ரைசர்ஸ் அணியால் கட்டுப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் 18வது ஓவரை பாசில் தம்பியிடம் கொடுத்தார் கேன் வில்லியம்சன். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள், 2 சிங்கிள் என மொத்தம் 22 ரன்கள் எடுக்கப்பட்டது. 

இதை சன்ரைசர்ஸ் அணியால் கட்டுப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் 18வது ஓவரை பாசில் தம்பியிடம் கொடுத்தார் கேன் வில்லியம்சன். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள், 2 சிங்கிள் என மொத்தம் 22 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 19வது ஓவரில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தாலும் கூட கடைசி ஓவரில் வெறும் 5 ரன்களே தேவை என்பதால் அதை டெல்லி அணி அடித்து வெற்றி பெற்றுவிட்டது. 

இதையடுத்து இந்த சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் அணி வெளியேறியது. எலிமினேட்டரில் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. 

வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது சன்ரைசர்ஸ் அணி. கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்த சன்ரைசர்ஸ் இந்த சீசனில் எலிமினேட்டருடன் வெளியேறியது. இந்த தோல்வியை அடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கண்ணீர் விட்டு அழுதார். 

ஐபிஎல் தொடர் விளையாட்டு என்பதை கடந்து பெரிய வியாபாரமாகத்தான் திகழ்கிறது. வியாபார நோக்கத்துடன் நடத்தப்படும் ஒரு தொடர். அதுமட்டுமல்லாமல் எந்த வீரரும் கோச்சும் நிரந்தரமல்ல. ஐபிஎல் அணிகள் அடுத்தடுத்த மாற்றத்தை நோக்கி சென்றுகொண்டே இருப்பவை. வீரர்களும் பயிற்சியாளர்களும் கூட பெரிய சீரியஸாக ஐபிஎல் போட்டிகளை எடுத்துக்கொள்வதுமில்லை. தோற்றுப்போனால் அதற்காக பெரியளவில் வருந்துவதுமில்லை என்பதுதான் எதார்த்தம். 

ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி மிகுந்த அர்ப்பணிப்பானவர் என்பதை அவர் டக் அவுட்டில் அமர்ந்து, போட்டியை பார்த்து நோட்ஸ் எடுப்பதை வைத்தே ரசிகர்கள் அறிந்திருப்பர். இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். அந்த சோகத்தை தாங்க முடியாமல் அவர் அழுதது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

Tom Moody. 💔😔 pic.twitter.com/FACKulM7KB

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தோற்றதால், அணியின் பயிற்சியாளர் அழுதது இதுவே முதன்முறையாக இருக்கும். 
 

click me!