உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.. முன்னாள் கேப்டனின் சிறுவயது கோச் அதிரடி

By karthikeyan VFirst Published May 10, 2019, 11:38 AM IST
Highlights

இந்த உலக கோப்பையை விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெல்லுமா என்பது இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் வலுவாக இருப்பதோடு ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இந்த உலக கோப்பையை விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெல்லுமா என்பது இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

விராட் கோலி கேப்டன்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும் ஜாம்பவான் தோனி அணியில் இருப்பது கூடுதல் பலம். விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், கேப்டன்சியில் அவர் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கிறார். களவியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், பயன்படுத்தும் முறை, இக்கட்டான சூழலில் சாமர்த்தியமாக செயல்படுவது, திட்டங்கள் வகுப்பது ஆகியவற்றில் இன்னும் நிறைய தேற வேண்டியிருக்கிறது. 

ஆனால் அணியில் முன்னாள் கேப்டனும் நீண்ட நெடிய அனுபவத்தை பெற்றவருமான தோனி இருப்பதால் களத்தில் இக்கட்டான நேரங்களில் சில முடிவுகளை தோனி எடுத்துவிடுகிறார். பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப், பவுலர்களுக்கு ஆலோசனை ஆகியவற்றை தோனி வழங்குவதால் கோலியின் கேப்டன்சியில் உள்ள குறைபாடுகள் பெரிதாக வெளியே தெரியவில்லை. அதைத்தாண்டியும் சில குறைபாடுகள் அப்பட்டமாக தெரிந்துவிடுகின்றன. 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தோனியின் சிறுவயது பயிற்சியாளர் பானர்ஜி, ஆட்டத்தின் போக்கை கணிப்பதிலும் திட்டங்கள் வகுப்பதிலும் தோனிக்கு பக்கத்தில் யாருமே வரமுடியாது. தற்போதைய கேப்டன் கோலிக்கு அந்த திறன்கள் எல்லாம் கிடையாது. எனவே கோலி தோனியிடமிருந்து நிறைய ஆலோசனைகளை பெற்று கேப்டன்சியில் தேற வேண்டும். தோனி அணியில் இருப்பதால் சரியா போச்சு. அவர் ஓய்வுபெற்ற பிறகு கோலியின் கதி அதோகதிதான். தோனிக்கு பின் கோலியை வழிநடத்த ஆள் இல்லை. எனவே அவர் கேப்டன்சியில் தேற வேண்டும் என்று பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 

click me!