ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட்.. ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்.. தூக்கியெறியப்பட்ட தொடக்க வீரர்

By karthikeyan VFirst Published Aug 22, 2019, 4:25 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸில் நடக்கிறது. இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மழையால் தாமதமானது. அரை மணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. டாஸ் போட்ட பிறகு, மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் மறுபடியும் தாமதமானது. 
 

ஆஷஸ் தொடரின் முதல் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. 

மூன்றாவது போட்டி லீட்ஸில் நடக்கிறது. இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மழையால் தாமதமானது. அரை மணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. டாஸ் போட்ட பிறகு, மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் மறுபடியும் தாமதமானது. 

முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித், இந்த போட்டியில் ஆடவில்லை. இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்தில் பலமாக அடித்தது. அதனால் அவர், அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலேயே ஆடவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் ஆடமாட்டார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இந்த போட்டியில் ஸ்மித்துக்கு பதிலாக மார்னஸ் லபுஷேன் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இவர் தான் ஸ்மித்துக்கு பதிலாக இறங்கினார். இந்நிலையில், அவரே இந்த போட்டியிலும் எடுக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பான்கிராஃப்ட் நீக்கப்பட்டு மார்கஸ் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை அனுபவத்து, மீண்டும் அணிக்கு திரும்பிய பான்கிராஃப்ட், முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. இந்நிலையில், அவரை அதிரடியாக நீக்கிவிட்டு மார்கஸ் ஹாரிஸை சேர்த்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், மார்னஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பேட்டின்சன், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், ஹேசில்வுட். 

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ரோரி பர்ன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச். 
 

click me!