சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் நிறைவு விழாவில் அசத்திய பாடகர் டிவைன்: ரசிகர்களை பிரமிக்க வைத்த டெக்னாலஜி!
இதில், சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். விருத்திமான் சகா 54 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 6 சிக்ஸ்கர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்கள் அடித்து கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் 214 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் கடின இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட வந்தது. ஆனால், 3 பந்துகளிலேயே மழை பெய்யத் தொடங்கியது. தற்போது வரையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போட்டி ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை தொடர்ந்து மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் சென்னையைச் சேர்ந்த 21 வயதான சாய் சுதர்ஷன். இவர் இதுவரையில் 4 முறை அரைசதங்கள் அடித்துள்ளார். இதில், ஒன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மற்றொன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி.
இதுவரையில் இந்த சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் சாய் சுதர்சன் மொத்தமாக 362 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 3 அரைசதங்கள் அடங்கும். கடந்த சீசனில் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சாய் சுதர்சன், 5 போட்டிகளில் விளையாடி 145 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், ஒரு சதம் அடங்கும்.
சுதர்சனின் தந்தை, கடந்த 1993 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய அளவிலான தடகள விளையாட்டு வீரராக இருந்தார். இதே போன்று இவரது தாயாரும், தேசிய அளவிலான கைப்பந்து (VolleyBall) வீராங்கனையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் சாய் சுதர்சன், 2021 ஆம் ஆண்டு சையது முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடினார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். இதையடுத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி சார்பில் 8 போட்டிகளில் விளையாடி அவர் 358 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.