
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில், ஐபிஎல் நிறைவு என்பதால் முதலில் பின்னணி பாடகர் கிங்கின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இதில், சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். விருத்திமான் சகா 54 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 6 சிக்ஸ்கர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்கள் அடித்து கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸ் பிரேக் விடப்பட்டது. அப்போது பின்னணி பாடகர் டிவைனின் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில், நரேந்திர மோடி மைதானம் பிரம்மாண்டமாக ஜொலித்தது. அதுமட்டுமின்றி ஸ்டேடியத்தில் விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனி பிரேம் காண்பிக்கப்பட்டது.