இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி டிராவில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவர் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
IND vs AFG 3rd T20I: டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா வரலாற்று சாதனை!
அதன்படி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான இப்ராஹிம் ஜத்ரன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் குவித்தது. இதில், குர்பாஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித் சர்மா, ரிங்கு சிங் – கடைசி ஓவரில் 36 ரன்கள் – இந்தியா 212 ரன்கள் குவிப்பு!
இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்மதுல்லா உமர்சாய் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது நபி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை வீசிய ஆவேஷ் கான் அந்த ஓவரில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும், ஒரு விக்கெட் கைப்பற்றினார். முகேஷ் குமார் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இதில், குல்பதீன் நைப் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், 2, 2, 3, வைடு என்று மொத்தமாக 18 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக இந்தப் போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கோல்டன் டக்கில் ஆட்டமிழந்து விராட் கோலி மோசமான சாதனை!