India vs South Africa: 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jan 22, 2022, 7:28 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இழந்த நிலையில், ஒருநாள் தொடரையும் இழந்துவிட்டது. முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த 2-0 என தொடரை இழந்தது.

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் அதிருப்தியளிக்கும் விதமாக இருந்தது.  பேட்டிங், பவுலிங் என இரண்டுமே மோசமாக இருந்தது. அதன் விளைவாகத்தான் இந்திய அணி படுதோல்வி அடைய நேர்ந்தது. 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்காவும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணியும் நாளை(ஜனவரி 23) நடைபெறும் கடைசி போட்டியில் களமிறங்குகின்றன.

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று இந்திய அணி தொடரை இழந்துவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அணியில் வாய்ப்பு கொடுத்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ராகுல் டிராவிட் தலைமையிலான அணி நிர்வாகம் அவ்வளவு எளிதில் காரணமில்லாமல் மாற்றங்கள் எதுவும் செய்யாது. ஆனால் பவுலிங் யூனிட்டில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஸ்பின்னராக அஷ்வினுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்படலாம்.

அதேபோல, தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவரும் ஃபாஸ்ட் பவுலர் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. சீனியர் ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாரின் பவுலிங் எடுபடவில்லை.எனவே அவருக்கு பதிலாக இளம் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூர், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல். 
 

click me!