India vs South Africa: தென்னாப்பிரிக்காவிடம் நாங்க தோற்றதற்கு இதுதான் காரணம்..! கேஎல் ராகுல் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jan 22, 2022, 5:37 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோற்றதற்கான காரணங்களை கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இழந்த நிலையில், ஒருநாள் தொடரையும் இழந்துவிட்டது. முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த 2-0 என தொடரை இழந்தது.

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் அதிருப்தியளிக்கும் விதமாக இருந்தது.  பேட்டிங், பவுலிங் என இரண்டுமே மோசமாக இருந்தது. அதன் விளைவாகத்தான் இந்திய அணி படுதோல்வி அடைய நேர்ந்தது.

குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். முதல் போட்டியில் தவானும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். அதனால் ஸ்கோர் உயர்ந்தது. பின்வரிசையில் ஷர்துல் தாகூர் நன்றாக ஆடினார். தவான் - கோலி பார்ட்னர்ஷிப்பை தவிர முதல் போட்டியில் வேறு பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை. 2வது போட்டியில் ராகுல் - ரிஷப் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். அதைத்தவிர வேறு பார்ட்னர்ஷிப் அமையவில்லை.

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் மற்றும் நல்ல பார்ட்னர்ஷிப் அமையாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும், அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
 

click me!