India vs South Africa:அவங்க 3 பேரையும் டீம்ல இருந்து தூக்கிட்டு இவங்க 3 பேரையும் சேருங்க! கௌதம் கம்பீர் அதிரடி

Published : Jan 22, 2022, 04:56 PM IST
India vs South Africa:அவங்க 3 பேரையும் டீம்ல இருந்து தூக்கிட்டு இவங்க 3 பேரையும் சேருங்க! கௌதம் கம்பீர் அதிரடி

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் கௌதம் கம்பீர்.  

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இழந்த நிலையில், ஒருநாள் தொடரையும் இழந்துவிட்டது. முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த 2-0 என தொடரை இழந்தது.

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் அதிருப்தியளிக்கும் விதமாக இருந்தது.  பேட்டிங், பவுலிங் என இரண்டுமே மோசமாக இருந்தது. அதன் விளைவாகத்தான் இந்திய அணி படுதோல்வி அடைய நேர்ந்தது.

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று இந்திய அணி தொடரை இழந்துவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் கௌதம் கம்பீர்.

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் அஷ்வின் ஆகிய மூவரையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்கள் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரையும் அணியில் ஆடவைக்க வேண்டும். இரண்டாம் தர அணியை வளர்த்தெடுக்க வேண்டும். 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய ஃபாஸ்ட்  பவுலர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ஷஃபாலி வர்மா மின்னல் வேக சதம்! வங்கதேசத்தை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!
Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!