IND vs SA:முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! சீனியர் வீரர் கம்பேக்; இளம் வீரர் அறிமுகம்

By karthikeyan VFirst Published Jun 9, 2022, 2:10 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20  போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த தொடரில் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். 

ஆனால் ராகுல் கடைசி நேரத்தில் காயம் காரணமாக நேற்று இந்த தொடரை விட்டு விலகிவிட்டார். எனவே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட்டின் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ராகுல் இல்லாததால் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்குவார். 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும், 4ம் வரிசையில் ரிஷப் பண்ட்டும் களமிறங்குவார்கள். ஹர்திக் பாண்டியா 5ம் வரிசையிலும், ஐபிஎல்லில் ஃபினிஷராக அசத்திய சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியின் ஃபினிஷராக கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவருக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஸ்பின்னராக யுஸ்வேந்திர சாஹலும், அவருடன் ஸ்பின் ஆல்ரவுண்டராக அக்ஸர் படேலும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேலுடன் உம்ரான் மாலிக் அறிமுகமாவதற்கு வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.
 

click me!