SL vs AUS: ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பான பவுலிங்..! ஆஸி.,யிடம் சொற்ப ரன்களுக்கு சரணடைந்த இலங்கை

Published : Jun 07, 2022, 09:15 PM IST
SL vs AUS: ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பான பவுலிங்..! ஆஸி.,யிடம் சொற்ப ரன்களுக்கு சரணடைந்த இலங்கை

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, நுவான் துசாரா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் முதல் 3 வீரர்கள் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினர். பதும் நிசாங்கா 36 ரன்களும், அசலங்கா 38 ரன்களும், குணதிலகா 26 ரன்களும் அடித்தனர். ஹசரங்கா 17 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவரில்16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜோஷ் ஹேசில்வுட், ஸ்டார்க்கின் பவுலிங்கில் சரணடைந்த இலங்கை அணி வெறும் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குணதிலகா, நிசாங்கா, அசலங்காவைத் தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடாததால், அந்த அணி சொற்ப ரன்களுக்கு சுருண்டது. 129 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸி., விரட்டுகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!