நீங்க 2 பேரும் கொஞ்சம் உட்காருங்க.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரா அவங்கள எடுத்துக்குறோம்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Jun 9, 2019, 1:24 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே சிறப்பாகத்தான் ஆடிவருகிறது. இரு அணிகளுக்கு அடுத்தபடியாக நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவின் பொறுப்பான சதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டி அந்த அணிக்கு மூன்றாவது போட்டி. 

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. குல்தீப் அல்லது சாஹலில் ஒருவரை நீக்கிவிட்டு ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம். சாஹல் நல்ல ஃபார்மில் நன்றாக வீசிவருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லை சாஹல் பலமுறை வீழ்த்தியுள்ளார். எனவே சாஹலின் பவுலிங் என்றாலே மனதளவில் மேக்ஸ்வெல் வீக்காகிவிடுவார். அதனால் சாஹல் அணியில் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். குல்தீப்புக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. 

அதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷமி சேர்க்கப்படலாம். இந்த போட்டி நடக்கவுள்ள லண்டன் ஓவல் ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்பதால், அதற்கு புவனேஷ்வர் குமார் சரிப்பட்டுவரமாட்டார். அதனால் அவருக்கு பதிலாக ஷமி சேர்க்கப்படலாம். ஸ்விங் கண்டிஷனாக இருந்தால் புவனேஷ்வர் குமார் இருப்பார். ஆனால் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகும் ஆடுகளத்தில், நல்ல வேகத்துடன் வீசக்கூடிய ஷமி சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சாஹல், ஷமி, பும்ரா. 
 

click me!