இந்தியா vs ஆஸ்திரேலியா.. மேட்ச் நடக்குற ஓவல் ஆடுகளம் எப்படிப்பட்டது தெரியும்ல.. இந்திய பேட்ஸ்மேன்களை எச்சரிக்கும் காம்பீர்

By karthikeyan VFirst Published Jun 9, 2019, 1:00 PM IST
Highlights

இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவின் பொறுப்பான சதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே சிறப்பாகத்தான் ஆடிவருகிறது. இரு அணிகளுக்கு அடுத்தபடியாக நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவின் பொறுப்பான சதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டி அந்த அணிக்கு மூன்றாவது போட்டி. 

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் தான் இந்திய அணியின் பெரிய பலம். எனவே அவர்களில் ஒருவர் கடைசிவரை களத்தில் நிற்பது மிகவும் அவசியம். அதை உணர்ந்து, தனது வழக்கமான ஆட்டத்தை ஆடாமல், ஆடுகளத்தின் தன்மையும் ஆட்டத்தின் சூழலையும் கருத்தில் கொண்டு ஆடினார் ரோஹித். ரோஹித் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முன்னெச்சரிக்கை தகவலை கொடுத்திருக்கிறார் காம்பீர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி குறித்து பேசிய காம்பீர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் ஆடியது அவரது வழக்கமான இன்னிங்ஸ் இல்லை. ஐபிஎல்லுக்கு முந்தைய கால இன்னிங்ஸ் போல் இருந்தது. ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு ஆடினார். எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக ஆடவேண்டும். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, அவ்வளவு எளிதாக ரோஹித்தை அடிக்கவிட மாட்டார்கள். எனவே கடுமையாக போராட வேண்டியிருக்கும். போட்டி நடக்கவுள்ள லண்டன் ஓவல் ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸாகும் என்பதை இந்திய வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும் என காம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

click me!