IND vs AUS: தொடரை வெல்லப்போது யார்? கடைசி டி20 டாஸ் ரிப்போர்ட்..! இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published Sep 25, 2022, 6:56 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இரு அணிகளுமே தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. 

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க - சொல்பேச்சு கேட்காத யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. களத்தைவிட்டு வெளியே விரட்டிவிட்ட கேப்டன் ரஹானே..! வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!