தீப்தி ஷர்மா செய்த ரன் அவுட்டால் இந்தியா வெற்றி.! அதிர்ந்து நின்ற இங்கிலாந்து வீராங்கனைகள்.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Sep 25, 2022, 6:25 PM IST
Highlights

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா செய்த மன்கட் ரன் அவுட்டால் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த ரன் அவுட்டை கண்டு இங்கிலாந்து வீராங்கனைகள் அதிர்ந்து நின்ற வீடியோ வைரலாகிவருகிறது.
 

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. டி20 தொடர் 1-2 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது.

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடந்தது.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி வெறும் 169 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. ஆனால் 170 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்தை அடிக்கவிடாமல் 153 ரன்களுக்கு சுருட்டி இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என ஒருநாள் தொடரை வென்றது.

இந்த போட்டியில் 118 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு கடைசி விக்கெட்டுக்கு டீனும் டேவிஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கையளித்தனர். டீன் அரைசதத்தை நெருங்கினார். இந்த ஜோடி சற்று அபாயமாக மாறிக்கொண்டிருந்த நிலையில், இங்கிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், இந்த கடைசி விக்கெட்டைவீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடலாம்.

அப்படியான சூழலில் 44வது ஓவரை வீசிய தீப்தி ஷர்மா, டீனை மன்கட் முறையில் ரன் அவுட்டாக்கினார். தீப்தி பந்துவீசும் முன்பே டீன் க்ரீஸைவிட்டு நகர்ந்ததால் தீப்தி ரன் அவுட் செய்தார். அதை ஆய்வு செய்த டிவி அம்பயர் அவுட் கொடுக்க, 153 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டாக, இந்திய அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - சொல்பேச்சு கேட்காத யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. களத்தைவிட்டு வெளியே விரட்டிவிட்ட கேப்டன் ரஹானே..! வைரல் வீடியோ

கடைசி விக்கெட்டுக்கு டீன் நன்றாக ஆடி அவரது அரைசதத்தையும்(47), அணியின் வெற்றிக்கு இலக்கையும் நெருங்கி கொண்டிருந்த நிலையில், தீப்தி ஷர்மாவிடம் இருந்து இப்படியொரு ரன் அவுட்டை எதிர்பார்த்திராத இங்கிலாந்து டிரெஸிங் ரூமில் அந்த அணி வீராங்கனைகள் அதிர்ந்து நின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Here's what transpired pic.twitter.com/PtYymkvr29

— 𝗔𝗱𝗶𝘁𝘆𝗮 (@StarkAditya_)
click me!