டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஜெர்சி..! டுவிட்டரில் ஃபோட்டோவை பகிர்ந்த ஜடேஜா

By karthikeyan VFirst Published May 29, 2021, 4:45 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி ஜெர்சியின் புகைப்படத்தை ஜடேஜா சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்.
 

ஐசிசி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்திய நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், வரும் ஜூன் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த இறுதி போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு அணிகளுமே இறுதி போட்டியில் வென்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1980-1990களில் இந்திய அணி பயன்படுத்திய ஜெர்சியை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய வீரர்கள் உடுத்தவுள்ளனர். அந்த ஜெர்சியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ஜடேஜா.

⏪Rewind to 90’s 👕 pic.twitter.com/bxqB6ptfhD

— Ravindrasinh jadeja (@imjadeja)

ஏற்கனவே ஆஸி., சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி, 1992 உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட ஜெர்சியை பயன்படுத்தியது. அதிலிருந்து அந்த ஜெர்சியைத்தான் உடுத்தி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடிவருகிறது. இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 1980-1990களில் பயன்படுத்தப்பட்ட ஜெர்சி பயன்படுத்தப்படவுள்ளது.
 

click me!