#SLvsIND யாருமே எதிர்பார்த்திராத ஒரு வீரரை இந்திய அணியின் கேப்டனாக பரிந்துரை செய்யும் பாக்., முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published May 29, 2021, 3:52 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.
 

இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடுகிறது. அதன்பின்னர் ஆகஸ்ட் - செப்டம்பரில் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இதற்கிடையே ஜூலை மாதம் இலங்கையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி ஆடவுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர் வீரர்கள் ஆடமாட்டார்கள். 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான ஷிகர் தவான், சாஹல் ஆகியோரும் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே என அடுத்தகட்ட இந்திய வீரர்களுடன் இலங்கைக்கு சென்று ஆடுகிறது இந்திய அணி. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஆகியோர் ஆடாததால், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பதே கேள்வியாக உள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் அந்த தொடரில் ஆடுவது சந்தேகமாகவுள்ளது. எனவே சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேவேளையில், ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் கேப்டனுக்கான தேர்வில் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, ஷிகர் தவான் தான் இலங்கைக்கு எதிரான தொடரில் கேப்டனாக நியமிக்கப்படுவார். பிரித்வி ஷாவோ அல்லது சஞ்சு சாம்சனோ இல்லை. என்னுடைய தேர்வு சஞ்சு சாம்சன் தான். எதிர்காலத்தை கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும். அந்தவகையில், தவான் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகப்போவதில்லை. எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டன்சியை கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும். அந்தவகையில், சஞ்சு சாம்சன் சரியாக இருப்பார் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!