
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும், இலங்கை அணி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக அந்த போட்டியில் ஜடேஜா அபாரமாக விளையாடினார். பேட்டிங்கில் 175 ரன்களை குவித்த ஜடேஜா, பவுலிங்கில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஜெயந்த் யாதவ் சொதப்பல்:
அந்த போட்டியில் ஜெயந்த் யாதவ் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை. பேட்டிங்கில் 2 ரன் மட்டுமே அடித்தார். பவுலிங்கிலும் சோபிக்கவில்லை. எனவே 2வது டெஸ்ட்டில் அக்ஸர் படேலை ஆடவைப்பதற்காக அவரை அணியில் சேர்த்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.
அக்ஸர் படேல் சேர்ப்பு:
அக்ஸர் படேல் காயம் மற்றும் அதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஆகிய காரணங்களால் இந்திய அணியில் இடம்பெறமுடியாமல் இருந்துவந்த நிலையில், அவர் கொரோனாவிலிருந்து மீண்டு மொஹாலி டெஸ்ட்டிலேயே இந்திய அணியில் இணைந்துவிட்டார்.
இதையும் படிங்க - ஷேன் வார்ன் மரணத்திற்கு காரணம் என்ன..? வெளியானது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்
எனவே 2வது டெஸ்ட்டில் அவரை ஆடவைக்கும் விதமாக அவரை அணியில் எடுத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். அவர் அணிக்குள் வந்ததால் குல்தீப் யாதவ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.