ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் படுமோசமான ரெக்கார்டு.. இலங்கை, பாக்., மாதிரி மொக்கை டீம்களே பரவாயில்ல

By karthikeyan VFirst Published Feb 9, 2020, 4:27 PM IST
Highlights

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி படுமோசமான சாதனையை படைத்துள்ளது. 
 

சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியாகவும் தலைசிறந்த வீரர்களை அதிகமாக பெற்றுள்ள அணியாகவும் இந்திய அணி தான் திகழ்கிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. 

முதல்முறையாக நடத்தப்பட்டுவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது இந்திய அணி. அதேபோல, இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது இந்திய அணி. 

ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது. 347 ரன்கள் அடித்தும் அதை அடிக்கவிடாமல் நியூசிலாந்தை தடுக்க முடியாத இந்திய அணி, இரண்டாவது போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 274 ரன்கள் என்ற இலக்கை சேஸிங்கும் செய்ய முடியாமல் தோற்றது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோற்றதன் மூலமாகவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்தது இந்திய அணி. முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்வி, இந்திய அணியின் 422வது தோல்வி. இரண்டாவது போட்டியில் அடைந்தது 423வது தோல்வி. 

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான தோல்விகளை பெற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி இதுவரை மொத்தமாக 986 ஒருநாள் போட்டிகளில் ஆடி 513 வெற்றிகளையும் 423 தோல்விகளையும் பெற்றுள்ளது. அதிகமான போட்டிகளில் ஆடியதால் தோல்வி லிஸ்ட்டிலும் முதலிடத்தில் உள்ளது. எனவே மற்ற அணிகளை விட அதிகமான போட்டிகளில் ஆடியதும் இந்திய அணி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம். 

இந்த பட்டியலில் இந்திய அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இலங்கை அணி உள்ளது. இலங்கை அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 421 தோல்விகளை அடைந்துள்ளது. பாகிஸ்தான் அணி 413 தோல்விகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. இலங்கை அணி 849 போட்டிகளில் ஆடி அவற்றில் 421 தோல்விகளையும் பாகிஸ்தான் அணி 927 போட்டிகளில் ஆடி அவற்றில் 413 தோல்விகளையும் பெற்றுள்ளன. 
 

click me!