6 வருஷம் கழித்து களத்தில் இறங்கிய சச்சின்.. முதல் பந்தே பவுண்டரி.. அதாண்டா மாஸ்டர் பிளாஸ்டர்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 9, 2020, 3:18 PM IST
Highlights

6 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் களத்தில் இறங்கிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தான் எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார். 
 

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்காக, முன்னாள் ஜாம்பவான்கள் கிரிக்கெட் போட்டியில் ஆடினர். புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் மோதின. 

பாண்டிங் அணி:

மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங்(கேப்டன்), லிட்ச்ஃபீல்டு, பிரயன் லாரா, அலெக்ஸ் பிளாக்வெல், பிராட் ஹேடின்(விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், லூக் ஹாட்ஜ், பிரெட் லீ, வாசிம் அக்ரம்.

கில்கிறிஸ்ட் அணி:

ஆடம் கில்கிறிஸ்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷேன் வாட்சன், பிராட் ஹாட்ஜ், யுவராஜ் சிங், எலிஸ் வில்லனி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கேமரூன் ஸ்மித், நிக் ரீவோல்ட், பீட்டர் சிடில், ஃபவாத் அகமது, குர்ட்னி வால்ஷ்.

இதில், பாண்டிங் தலைமையிலான அணிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தான் பயிற்சியாளர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாண்டிங் அணி, பாண்டிங் மற்றும் லாராவின் அதிரடியால் 10 ஓவரில் 104 ரன்களை குவித்தது. 105 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கில்கிறிஸ்ட் அணி 10 ஓவரில் 103 ரன்களை அடித்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸுக்கும் இரண்டாவது இன்னிங்ஸுக்கும் இடையேயான பிரேக்கில், கடந்த ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற எல்லிஸ் பெர்ரியின் பவுலிங்கில் ஒரு ஓவரை எதிர்கொள்வதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார். 

அதேபோல இன்னிங்ஸ் பிரேக்கின்போது எல்லிஸின் ஒரு ஓவரை எதிர்கொண்டார். 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், கடைசியாக 2014ம் ஆண்டு கண்காட்சி போட்டி ஒன்றில் ஆடினார். அதுதான் கடைசி. அதன்பின்னர் சுமார் 6 ஆண்டுகள் கழித்து இன்று களத்திற்கு வந்த சச்சின், எல்லிஸின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த வீடியோ இதோ.. 

Sachin is off the mark with a boundary!https://t.co/HgP8Vhnk9s pic.twitter.com/4ZJNQoQ1iQ

— cricket.com.au (@cricketcomau)

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கை மிஸ் செய்யும் அவரது ரசிகர்களுக்கு இந்த ஒரு ஓவரில் அவர் பேட்டிங் ஆடிய விருந்தாக அமைந்தது. 


 

click me!