IND vs SA: 3வது டி20 போட்டியில் பெரிய தலைகளுக்கு ஓய்வு..! உத்தேச இந்திய அணி

Published : Oct 03, 2022, 07:12 PM IST
IND vs SA: 3வது டி20 போட்டியில் பெரிய தலைகளுக்கு ஓய்வு..! உத்தேச இந்திய அணி

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்டதால் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும். இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்திய மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

3வது டி20 போட்டி நாளை (அக்டோபர் 4) இந்தூரில் நடக்கிறது. இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்றுவிட்டதால், டி20 உலக கோப்பையில் ஆடும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய முக்கியமான வீரர்களுக்கு கடைசி டி20 போட்டியில் ஓய்வளிக்கப்படும். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மிகச்சரியான மாற்று வீரர் இவர்தான்..! ஷேன் வாட்சன் கருத்து

அதனால் ஷ்ரேயாஸ் ஐயர், ஷபாஸ் அகமது ஆகிய வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். மேலும் ஃபாஸ்ட் பவுலர் ஹர்ஷல் படேலுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜுக்கு ஆட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ஸர் படேல் மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவருமே இடது கை ஸ்பின்னர்கள் தான். இருவரும் ஒரேமாதிரியான பவுலர்கள் என்றாலும், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அக்ஸர் படேலின் மேட்ச் பிராக்டிஸுக்காக அவர் கண்டிப்பாக ஆடுவார். ஷபாஸ் அகமதுவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலை எடுக்கலாம். ஆனால் ஷபாஸ் அகமது பேட்டிங் ஆடக்கூடியவர் என்பதால் பேட்டிங்  டெப்த்தை கருத்தில்கொண்டு ஷபாஸ் அகமதுதான் அணியில் எடுக்கப்படுவார்.

இதையும் படிங்க - சூர்யகுமார் விஷயத்துல ரிஸ்க் எடுக்க முடியாது.. இனிமேல் அவர் ஆடமாட்டார்..! கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி

3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஷபாஸ் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து