IND vs AFG: உப்புச்சப்பில்லாத மொக்கை மேட்ச்சுக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Sep 8, 2022, 3:29 PM IST
Highlights

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இந்த 4 அணிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே ஃபைனலுக்கு முன்னேறிவிட்டபடியால் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.

இதையும் படிங்க - ஸ்டேடியத்தில் செம சண்டை.. அடித்துக்கொண்ட ஆஃப்கான் - பாக்., ரசிகர்கள்..! வைரல் வீடியோ

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், நாளைய சூப்பர் 4 போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரண்டிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில், ஏற்கனவே இந்த தொடரைவிட்டு வெளியேறிவிட்ட, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போகாத உப்புச்சப்பில்லாத போட்டியில் இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படலாம். ஏனெனில் 2 சூப்பர் 4 போட்டிகளிலும் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியதுடன், விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பினார். எனவே அவர் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக்கும், தீபக் ஹூடாவிற்கு பதிலாக அக்ஸர் படேலும் சேர்க்கப்படலாம்.

இதையும் படிங்க - யாருப்பா உனக்கு மெசேஜ் பண்ணலைனு சொல்ற.. அவங்ககிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே? கோலியை விளாசிய கவாஸ்கர்

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங். 
 

click me!