ஸ்டேடியத்தில் செம சண்டை.. அடித்துகொண்ட ஆஃப்கான் - பாக்., ரசிகர்கள்..! வைரல் வீடியோ

Published : Sep 08, 2022, 03:00 PM IST
ஸ்டேடியத்தில் செம சண்டை.. அடித்துகொண்ட ஆஃப்கான் - பாக்., ரசிகர்கள்..! வைரல் வீடியோ

சுருக்கம்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஸ்டேடியத்தில் கடுமையாக மோதிக்கொண்டனர்.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில் சூப்பர் 4 சுற்றில் தலா 2 வெற்றிகளை பெற்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஃபைனலுக்கு தகுதிபெற்றுவிட்டன. 

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையே நேற்று ஷார்ஜாவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 129 ரன்கள் மட்டுமே அடித்தது.

130 ரன்கள் என்ற எளிய இலக்கைத்தான் பாகிஸ்தான் விரட்டியது. ஆனால் அந்த இலக்கை அவ்வளவு எளிதாக பாகிஸ்தானை அடிக்க அனுமதிக்கவில்லை ஆஃப்கானிஸ்தான் அணி. ஆஃப்கானிஸ்தான் பவுலர்கள் ஃபரூக்கி, ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அபாரமாக பந்துவீசி, பாகிஸ்தான் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியதுடன், பாபர் அசாம்(0), முகமது ரிஸ்வான்(20) மற்றும் ஃபகர் ஜமான் (5) ஆகிய 3 முக்கியமான வீரர்களையும் ஆரம்பத்திலேயே வீழ்த்திவிட்டனர்.

இதையும் படிங்க - யாருப்பா உனக்கு மெசேஜ் பண்ணலைனு சொல்ற.. அவங்ககிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே? கோலியை விளாசிய கவாஸ்கர்

ஆனால் அதன்பின்னர் ஷதாப் கான் மற்றும் இஃப்டிகார் அகமது ஆகிய இருவரும் பொறுப்பாக பேட்டிங் ஆடி இலக்கை நோக்கி பாகிஸ்தானை அழைத்துச்சென்ற நிலையில், அவர்களும் ஆட்டமிழந்தனர். ஷதாப் கான் 36 ரன்களும், இஃப்டிகார் 30 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் தொடரைவிட்டு வெளியேற, பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆட்டமே படு சுவாரஸ்யமாக இருந்தது. அத்துடன் பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலிக்கும் ஆஃப்கான் வீரர் ஃபரீத் அகமதுவுக்கும் இடையே சண்டை மூண்டது. இருவரும் களத்தில் மோதிக்கொண்டனர். பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில், சுவாரஸ்யமான இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

போட்டிக்கு பின், ஸ்டேடியத்தில் இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ஆஃப்கான் - பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இரு அணி ரசிகர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ள ஸ்டேடியமே பரபரப்பானது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஷோயப் அக்தர், ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள் எப்போதுமே இப்படித்தான் செய்வதாகவும், விளையாட்டாய் விளையாட்டாய் பார்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?