India vs West Indies: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Feb 17, 2022, 09:32 PM IST
India vs West Indies: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்திய அணி.

அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

1-0 என இந்திய அணி டி20 தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ராகுல் இந்த தொடரில் ஆடாததால் இஷான் கிஷன் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்குவார்.  மிடில் ஆர்டரில் பந்துவீசத்தெரிந்த பேட்ஸ்மேனுக்குத்தான் வாய்ப்பு என்பதால் தான், ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாமல், வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துவிட்டதால், அவர் தான் அடுத்த போட்டியிலும் ஆடுவார். எனவே கடந்த போட்டியில் ஆடிய அதே பேட்டிங் காம்பினேஷன் தான் ஆடும்.

பவுலிங் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்பட அவசியமில்லை என்பதால், முதல் டி20 போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட்  (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர்,  ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?