டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் யார் ஓபனிங்கில் இறங்கணும்..! முன்னாள் வீரர்களின் அதிரடி கருத்து

Published : Feb 17, 2022, 07:13 PM IST
டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் யார் ஓபனிங்கில் இறங்கணும்..! முன்னாள் வீரர்களின் அதிரடி கருத்து

சுருக்கம்

டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் கருத்து கூறியுள்ளனர்.  

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியில் ரோஹித்துடன் தவான் தான் தொடக்க வீரராக ஆடுவார் என்பதை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி உரக்க தெரிவித்துவிட்டது. அடுத்த ஆண்டு (2023) ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில்,  ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ரோஹித்தின் கேப்டன்சியில் வலுவான ஒருநாள் அணியை கட்டமைக்கும் பணி தொடங்கிவிட்டது.

அந்தவகையில், ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் தவான் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மிடில் ஆர்டரிலும் ஆடவுள்ளனர். இது பேட்டிங் ஆர்டரின் டெப்த்தை அதிகரிக்கும் என்பதாலும், ரோஹித்தின் வெற்றிகரமான ஓபனிங் பார்ட்னர் தவான் என்பதால் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாலும் அவர் தான் தொடக்க வீரராக இறங்கவுள்ளார்.

ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் ராகுல் - இஷான் கிஷன் ஆகிய இருவரும் யார் தொடக்க வீரராக ஆடுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இஷான் கிஷன் இளம் அதிரடி வீரர். அதேவேளையில், டி20 கிரிக்கெட்டில் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக ஆடிவந்தார். ராகுல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடாததால் இந்த தொடரில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடிவருகிறார்.

ரோஹித்துடன் இஷான் கிஷனே தொடக்க வீரராக ஆடலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆட முடிகிறது என்றால், டி20 போட்டிகளிலும் ராகுல் மிடில் ஆர்டரிலேயே பேட்டிங் ஆடலாம் என்ற கருத்துகளும் உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பார்த்திவ் படேல் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பார்த்திவ் படேல்,  கேஎல் ராகுல் தான் நீண்டகால ஓபனிங் ஆப்சனாக இருப்பார். ராகுல் அணிக்குள் வந்துவிட்டால், அவர்தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக ஆட வேண்டும். என்னை பொறுத்தமட்டில் டி20 உலக கோப்பையிலும் ரோஹித்துடன் ராகுலே தொடக்க வீரராக ஆடவேண்டும் என்று பார்த்திவ் படேல் தெரிவித்தார்.

ஆஷிஷ் நெஹ்ராவும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று நெஹ்ராவும் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!