அந்த பையனுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியான வீரர்! இந்திய வீரருக்கு கவாஸ்கர் புகழாரம்

Published : Feb 17, 2022, 05:56 PM IST
அந்த பையனுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியான வீரர்! இந்திய வீரருக்கு கவாஸ்கர் புகழாரம்

சுருக்கம்

ரூ.10.75 கோடி என்ற பெரும் தொகைக்கு தகுதியான வீரர் ஹர்ஷல் படேல் என்று கருத்து கூறியிருக்கிறார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.  

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்தது. இந்த மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். 

இந்த மெகா ஏலத்தில் இஷான் கிஷன் தான் அதிகபட்ச தொகைக்கு விலைபோனார். இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. அதேபோலவே, தீபக் சாஹரை வேறு எந்த அணிக்கும் விட்டுக்கொடுக்க விரும்பாத சிஎஸ்கே அணி, அவரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு எடுத்து அவரை கேப்டனாக நியமித்துள்ளது கேகேஆர் அணி.

இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் ரூ.11.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். 4 வீரர்கள் ரூ.10.75 கோடிக்கு விலைபோனார்கள். அவர்களில் இருவர் இந்திய வீரர்கள்.

ஷர்துல் தாகூரை ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணியும், ஹர்ஷல் படேலை ரூ.10.75 கோடிக்கு ஆர்சிபி அணியும் எடுத்தன. கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடிய ஹர்ஷல் படேல், அபாரமாக பந்துவீசி கடந்த சீசனில் அதிகபட்சமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்ப்டை வென்றார்.

இந்நிலையில், ஹர்ஷல் படேலை வேறு அணிக்கு விட்டுக்கொடுக்க விரும்பாத ஆர்சிபி அணி, அவரை எடுக்க ஆர்வம் காட்டிய மற்ற அணிகளுடன் போட்டி போட்டு ரூ.10.75 கோடிக்கு அவரை எடுத்தது.

இந்நிலையில், ஹர்ஷல் படேல் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ஐபிஎல் ஏலத்தில் ஹர்ஷல் படேல் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர். கடந்த சீசனில் மிக அருமையாக விளையாடினார். ஹர்ஷல் படேல் அவரை வளர்த்துக்கொண்ட விதம் அபாரம். முன்பெல்லாம் அவர் வேகத்தை மாற்றி மாற்றி வீசமாட்டார். அதனால் பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்ள அதிகம் விரும்பினார்கள். அவரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் தனது தவறுகளிலிருந்து பாடம் கற்று தன்னைத்தானே வளர்த்துக்கொண்டார் ஹர்ஷல் படேல். இன்றைக்கு அவரை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் பயப்படுகின்றனர் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!