India vs Sri Lanka: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Feb 25, 2022, 10:20 PM IST
India vs Sri Lanka: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டி முழுக்க இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடியது இந்திய அணி. 

எனவே நாளை தர்மசாலாவில் நடக்கும் 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எந்த மாற்றமும் செய்யப்படாது. 2வது டி20 போட்டியில், முதல்  போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!