India vs Sri Lanka: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

Published : Feb 25, 2022, 09:48 PM IST
India vs Sri Lanka: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடரும், அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கின்றன.  முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 மற்றும் 3வது டி20 போட்டிகள் முறையே வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடக்கின்றன.

அதன்பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி மார்ச் 12ம் தேதி பெங்களூருவிலும் தொடங்கி நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

இலங்கை டெஸ்ட் அணி:

திமுத் கருணரத்னே (கேப்டன்), பதும் நிசாங்கா, லஹிரு திரிமன்னே, தனஞ்செயா டி சில்வா (துணை கேப்டன்), குசால் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், சாரித் அசலங்கா, நிரோஷன் டிக்வெல்லா, சாமிகா கருணரத்னே, ரமேஷ் மெண்டிஸ்,லஹிரு குமாரா, சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, விஷ்வா ஃபெர்னாண்டோ, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, லசித் எம்பல்டேனியா.

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், பிரியன்க் பன்சால், விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!