India vs Sri Lanka: ரோஹித் சர்மா இலங்கையை பொம்மை மாதிரி வச்சு விளையாடிட்டாரு..! முன்னாள் ஸ்பின்னர் புகழாரம்

Published : Feb 25, 2022, 06:33 PM IST
India vs Sri Lanka: ரோஹித் சர்மா இலங்கையை பொம்மை மாதிரி வச்சு விளையாடிட்டாரு..! முன்னாள் ஸ்பின்னர் புகழாரம்

சுருக்கம்

ரோஹித் சர்மா இலங்கையை பொம்மை மாதிரி வைத்து விளையாடியதாக பிரக்யான் ஓஜா கருத்து கூறியுள்ளார்.  

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, இஷான் கிஷன் (89) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (57) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது.

200 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், அணியின் ஸ்கோர் வேகமெடுக்கவில்லை. எனவே 137 ரன்கள் மட்டுமே அடித்து 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் எந்த சூழலிலுமே இலங்கை அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை இந்திய அணியே இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தியது. 

இலங்கை அணியின் எந்த வீரரும் அச்சுறுத்தம்படியாக ஆடவில்லை என்பதுடன், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் ஜெயிக்க முடியாது என்பது அப்பட்டமாக தெரிந்ததால், கேப்டன் ரோஹித் சர்மா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா ஆகிய எக்ஸ்ட்ரா பவுலிங் ஆப்சனாக இருக்கும் வீரர்களிடம் பந்தை கொடுத்து மேட்ச் பிராக்டிஸ் செய்ய வைத்தார்.

வெங்கடேஷ் ஐயர் மற்றும் தீபக் ஹூடா ஆகிய பார்ட் டைம் பவுலர்களுக்கு இது நல்ல பயிற்சியாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு 18ஓவர்கள் வரை பவுலிங் கொடுத்தார். பும்ராவிற்கு ஒரு ஓவரும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவருக்கும் 2 ஓவர்களும் எஞ்சியிருந்த நிலையில், 18 ஓவர்கள் வரை வெங்கடேஷ் ஐயரையும் தீபக் ஹூடாவையும் வீசவைத்தார். 

இந்நிலையில், இலங்கையை ரோஹித் சர்மா ஒரு பொம்மை போல வைத்து விளையாடியதாக தெரிவித்துள்ளார் பிரக்யான் ஓஜா. இதுகுறித்து பேசிய பிரக்யான் ஓஜா, ரோஹித் சர்மா இலங்கையை பொம்மை மாதிரி வைட்து விளையாடினார். 5, 6வது பவுலிங் ஆப்சனாக திகழும் வீரர்களின் பவுலிங் தன்னம்பிக்கை வளர ஏதுவாக அவர்களை பந்துவீசவைத்தார். பும்ரா, புவனேஷ்வர் குமாருக்கு ஓவர்கள் எஞ்சியிருந்தபோதிலும், மேட்ச் பிராக்டீஸுக்காக எக்ஸ்ட்ரா பவுலிங் ஆப்சன் வீரர்களை பந்துவீசவைத்தார் ரோஹித் என்று ஓஜா தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!