ஸ்காட்லாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் மாற்றம்..? உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 2:05 PM IST
Highlights

ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய முக்கியமான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன.

அரையிறுதிக்கு க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக தகுதிபெற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. 

க்ரூப் 2-ல் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்விகளை தழுவிய இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

எனவே இந்திய அணிக்கான அரையிறுதி கதவு திறந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி ஸ்காட்லாந்தையும், நமீபியாவையும் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தானை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்திய அணி, ஸ்காட்லாந்தையும் நமீபியாவையும் வீழ்த்தினாலும், ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தவில்லை என்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது.

எனவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது ஆஃப்கானிஸ்தான் கையில் தான் உள்ளது. இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

முதல் 2 போட்டிகளில் ஆடும் லெவன் காம்பினேஷன் செட் ஆகாமல் திணறிவந்த இந்திய அணிக்கு, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணி செட் ஆகிவிட்டது. ரோஹித் - ராகுல் அபாரமாக ஆடி அவர்களது ஓபனிங் ரோலை சிறப்பாக செய்தனர். ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்டியா அவர்களது ஃபினிஷிங் ரோலை அருமையாக செய்தனர். சீனியர் ஸ்பின்னர் அஷ்வினின் வருகை அணிக்கு வலுசேர்த்தது. 4 ஆண்டுகள் கழித்து டி20 கிரிக்கெட்டில் ஆடிய அஷ்வின், 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

எனவே இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதற்கான அவசியம் இல்லை என்பதால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஸ்காட்லாந்தை எதிர்கொள்ளும்.

இதையும் படிங்க - இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்..! இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் ஆரம்பம்

இந்தியா - ஸ்காட்லாந்து இடையேயான போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.

உத்தேச ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலம் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், க்றிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சாஃபியான், ஷார்ஃப், அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல்.
 

click me!