#ENGvsIND கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Sep 9, 2021, 2:12 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-1 என வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு, கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று குறைந்தபட்சம் தொடரை 2-2 என டிரா செய்யும் வாய்ப்பிருக்கிறது. எனவே கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை டிராவிலாவது முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் 4 போட்டிகளிலும் ஆடிராத சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு கடைசி டெஸ்ட்டில் ஆட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்வினை ஆடவைக்காதது கடும் விமர்சனங்களுக்குள்ளான நிலையிலும், கொஞ்சம்கூட அசராமல் 4 போட்டிகளிலும் அஷ்வினை ஓரங்கட்டினார் கோலி. ஆனால் ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இல்லாததால், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காயத்தால் கடந்த டெஸ்ட்டில் ஆடாத முகமது ஷமி, கடைசி டெஸ்ட்டில் ஆடுவார். 4வது டெஸ்ட்டில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய சிராஜை நீக்கிவிட்டு அவரது இடத்தில் ஷமி ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்துல் தாகூர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்ததால் அவர் நீக்கப்பட வாய்ப்பில்லை. எனவே ஷமி அணியில் இணைவதால் சிராஜ் தான் நீக்கப்படுவார்.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா.
 

click me!