IND vs SA: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! எத்தனை மாற்றங்கள்..?

Published : Jun 12, 2022, 02:32 PM IST
IND vs SA: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! எத்தனை மாற்றங்கள்..?

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 212 ரன்கள் என்ற கடினமான இலக்கை அசால்ட்டாக அடித்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பிலும், தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என வலுவான முன்னிலை பெறும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் டி20 போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ஏனெனில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமில்லை. உம்ரான் மாலிக்கை சேர்க்கலாம். ஆனால் ஒரே போட்டியில் ஹர்ஷல் படேல் அல்லது ஆவேஷ் கானை நீக்குவது சரியாக இருக்காது. எனவே எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.

உத்தேச இந்திய அணி:

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!