#SLvsIND 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 19, 2021, 8:18 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 263 ரன்கள் என்ற இலக்கை 37வது ஓவரிலேயே அடித்து இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு இந்தியா அனுப்பியது 2ம் தர இந்திய அணி என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா கருத்து தெரிவித்திருந்த நிலையில், இலங்கை அணி மீது பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்திலுமே முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்று, ரணதுங்காவிற்கு செயலில் பதிலடி கொடுத்தது இந்திய அணி.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நாளை நடக்கிறது. அந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.

ஷிகர் தவான் தலைமையில் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி காம்பினேஷன், நல்ல பேலன்ஸான அணியாக இருந்தது. அணியில் ஆடிய அனைத்து வீரர்களுமே சிறப்பான பங்களிப்பு செய்தனர். எனவே 2வது ஒருநாள் போட்டியிலும் அதே ஆடும் லெவனுடன் தான் இந்திய அணி களமிறங்கும். எனவே இந்திய அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!