
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி நாளை அகமதாபாத்தில் நடக்கிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் தொடரை வெல்ல முடியும் என்ற கட்டாயத்தில் 4வது போட்டியில் களமிறங்குகிறது இந்திய அணி.
4வது போட்டியில் இந்திய அணி 2 மாற்றங்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 போட்டிகளில் 2 டக் அவுட்டுகளுடன் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்துள்ள ராகுலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம். அதனால் ரோஹித்தும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக இறங்கலாம்.
அடுத்ததாக, சாஹல் நீக்கப்பட்டு ரிஸ்ட் ஸ்பின் ஆல்ரவுண்டர் ராகுல் டெவாட்டியா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முதல் 3 போட்டிகளில் 12 ஓவர்கள் வீசி 119 ரன்களை வாரி வழங்கியுள்ளார் சாஹல். விக்கெட்டும் பெரிதாக வீழ்த்தவில்லை. சாஹலின் பவுலிங் எடுபடாத நிலையில், அவருக்கு பதிலாக ராகுல் டெவாட்டியா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர்.