இந்தியாவில் டாஸை ஜெயிங்க; உலக கோப்பையை தூக்குங்க - மைக்கேல் வான்

Published : Mar 17, 2021, 03:58 PM IST
இந்தியாவில் டாஸை ஜெயிங்க; உலக கோப்பையை தூக்குங்க - மைக்கேல் வான்

சுருக்கம்

இந்தியாவில் டாஸ் வெல்லும் அணி டி20 உலக கோப்பையை ஜெயிக்கலாம் என இங்கி., முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.  

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கும் நிலையில், டாஸ் வெல்லும் அணி கோப்பையை ஜெயிக்கலாம் என மைக்கேல் வான் கருத்து கூறியுள்ளார். இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நடந்துவருகிறது.

இந்த தொடரில் டாஸ் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கிறது. இதுவரை 3 டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மூன்றிலுமே சேஸிங் அணி தான் வெற்றி பெற்றது.

2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீச்சு சவாலாக இருப்பதால் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. அதனால் சேஸிங் அணிதான் ஜெயிக்கிறது. டாஸ் வெல்லும் அணியால் தான், தாங்கள் செய்ய விரும்புவதை தேர்ந்தெடுக்க முடியும்.

அந்தவகையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே ஜெயித்திருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் டாஸ் வெல்லும் அணியே டி20 உலக கோப்பையை ஜெயிக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!