#INDvsENG 3வது டி20: இங்கிலாந்து அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்.. உத்தேச இங்கிலாந்து அணி

Published : Mar 15, 2021, 08:21 PM IST
#INDvsENG 3வது டி20: இங்கிலாந்து அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்.. உத்தேச இங்கிலாந்து அணி

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. முதல் டி20யில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

3வது டி20 போட்டி நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கும். முதல் போட்டியில் ஆடிய மார்க் உட், 2வது போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக டாம் கரன் ஆடினார். டாம் கரன் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. 2வது டி20யில் அவர் வீசிய 2 ஓவரில் இந்திய அணி 26 ரன்கள் அடித்தது.

எனவே 3வது டி20 போட்டியில் டாம் கரன் நீக்கப்பட்டு, மீண்டும் ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டே சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர், ஜேசன் ராய்ன், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம்  கரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!