சின்ன பையன் தான்; ஆனால் அவனுக்கு பவுண்டரியைவிட சிக்ஸர் கைவந்த கலை! இந்திய வீரரை புகழ்ந்த பாக்., முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Mar 15, 2021, 10:25 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷனை பாக்., முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான இளம் வீரரான இஷான் கிஷன், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களை விளாசினார்.

மிகச்சிறந்த அணியான இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே கொஞ்சம் கூட பயமோ பதற்றமோ இல்லாமல் அபாரமாக ஆடியதுடன், பவுண்டரிக்கு நிகராக சிக்ஸர்களை விளாசி மிரட்டினார்.

இந்நிலையில், இஷான் கிஷன் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா, விராட் கோலி நன்றாக ஆடியது இருக்கட்டும்; அவர் பெரிய வீரர். எனது ஹீரோ அறிமுக வீரர் இஷான் கிஷன் தான். மிகத்திறமையான வீரர், முழு சுதந்திரத்துடன் ஆடினார். இஷான் கிஷன் பேட்டிங் ஆடும் விதத்தை மறுமுனையில் நின்று அவரது கேப்டன் என்ஜாய் செய்து பார்த்ததுடன், அவரை பாராட்டவும் செய்தார்.

இஷான் கிஷன் மிகப்பெரிய பவர் ஹிட்டர். அவர் அவ்வளவு உயரம் கிடையாது. ஆனால் பந்தை அழகாக டைமிங்கில் அடிக்கிறார். அவரது பவுண்டரிகளை விட சிக்ஸர்களை வெகுவாக நம்புகிறார். இஷான் கிஷன் ஒரு கேம் சேஞ்சர் என்று ரமீஸ் ராஜா புகழாரம் சூட்டினார்.
 

click me!