#INDvsENG முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 4, 2021, 5:06 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளது. முதல் போட்டி நாளை(பிப்ரவரி 5) சென்னையில் தொடங்குகிறது. 

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி அனைவரின் பாராட்டையும் குவித்த ஷுப்மன் கில், ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறக்கப்பட வாய்ப்புள்ளது. மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறக்கப்படுவது சந்தேகமே. ஏனெனில் ஷுப்மன் கில் ஆஸி.,யில் சிறப்பாக ஆடி தன்னம்பிக்கையுடனும் நல்ல ஃபார்மிலும் இருப்பதால் கில்லே தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புஜாரா, கோலி, ரஹானே நிரந்தர தேர்வு. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், தரமான விக்கெட் கீப்பர் தேவை என்ற முறையில், இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் ரிதிமான் சஹாவே விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுவந்தார். ஆனால் ஆஸி.,யில் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ரிஷப் பண்ட்டின் தன்னம்பிக்கை லெவல் அதிகமாகியிருப்பதால், நல்ல பேட்டிங் டச்சில் இருப்பதால் அவரே எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவருமே எடுக்கப்படுவார்கள். ஹனுமா விஹாரிக்கு அணியில் வாய்ப்பில்லை. அக்ஸர் படேல் நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய ஸ்பின்னர். எனவே அவரை அணியில் எடுப்பதன் மூலம் ஒரு பவுலிங் ஆப்சன் கூடுதலாக கிடைக்கும் என்பதால், அக்ஸர் படேலே  எடுக்கப்படுவார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ராவும், ஆஸி.,தொடரில் அசத்திய முகமது சிராஜும் எடுக்கப்படுவார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
 

click me!