இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Oct 16, 2021, 9:49 PM IST
Highlights

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. 2017ம் ஆண்டிலிருந்து நான்காண்டுகளாக தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிகிறது.

அதன்பின்னர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக, முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. பிசிசிஐயின் கோரிக்கையை ராகுல் டிராவிட் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே டிராவிட் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி கண்டிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் சிறந்த இடத்தை பிடித்து கோலோச்சும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், அடுத்த பயிற்சியாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த கேப்டன் விராட் கோலி, இதுவரை புதிய பயிற்சியாளர் குறித்த ஆலோசனை எதுவும் எங்களுக்குள் நடக்கவில்லை. இப்போதைக்கு எங்கள் நோக்கமெல்லாம், டி20 உலக கோப்பையை ஜெயிப்பதுதான் என்று கோலி தெரிவித்தார்.
 

click me!