ரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு

Published : Dec 03, 2019, 12:02 PM IST
ரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு

சுருக்கம்

ரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   

தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி ஆகிய இரண்டு தொடர்களிலும் நன்றாகவே ஆடியது. ஆனாலும் இரண்டு தொடர்களின் இறுதி போட்டியிலும் கர்நாடக அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

இந்நிலையில், அடுத்ததாக ரஞ்சி டிராபி நடக்கவுள்ளது. ரஞ்சி டிராபியை தமிழ்நாடு அணி ஆவலாக எதிர்நோக்கியுள்ளது. ரஞ்சி டிராபியிலும் தமிழ்நாடு அணி முதல் போட்டியில் கர்நாடக அணியைத்தான் எதிர்கொள்கிறது. அடுத்ததாக இமாச்சல பிரதேச அணியுடன் மோதுகிறது. 

இந்த இரண்டு போட்டிகளுக்குமான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தும் கூட, விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியில் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபரஜித் ஆகிய அனுபவ வீரர்கள் உள்ளனர். 

சையத் முஷ்டாக் அலி தொடரில் அசத்திய இளம் ஸ்பின்னர்களான சாய் கிஷோர், சித்தார்த் மணிமாறன் ஆகியோருடன் இளம் வீரர்களான ஷாருக்கான், ஹரி நிஷாந்த் ஆகியோரும் உள்ளனர். கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் கே.முகுந்த் ஆடுகிறார். இமாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்புவதால் கே.முகுந்த் அணியிலிருந்து விலகிவிடுவார். 

தமிழ்நாடு அணி:

விஜய் சங்கர்(கேப்டன்), பாபா அபரஜித்(துணை கேப்டன்), முரளி விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், ரவிச்சந்திரன் அஷ்வின், சாய் கிஷோர், டி.நடராஜன், அபிஷேன் தன்வர், முருகன் அஷ்வின், சித்தார்த் மணிமாறன், ஷாருக்கான், கே.முகுந்த்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!