Vijay Hazare Trophy:ஜெகதீசன் சதம்; ஷாருக்கான் காட்டடி ஃபினிஷிங்!கர்நாடகாவுக்கு கடினஇலக்கை நிர்ணயித்த தமிழ்நாடு

Published : Dec 21, 2021, 02:23 PM IST
Vijay Hazare Trophy:ஜெகதீசன் சதம்; ஷாருக்கான் காட்டடி ஃபினிஷிங்!கர்நாடகாவுக்கு கடினஇலக்கை நிர்ணயித்த தமிழ்நாடு

சுருக்கம்

ஜெகதீசனின் அபார சதம் மற்றும் ஷாருக்கானின் காட்டடி ஃபினிஷிங்கால் விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் கர்நாடக அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது தமிழ்நாடு அணி.  

விஜய் ஹசாரே தொடரில் 2 காலிறுதி போட்டிகள்  இன்று நடக்கின்றன. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற கர்நாடகா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் பாபா அபரஜித் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசனுடன் இணைந்து சாய் கிஷோர் அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு ஜெகதீசனும் சாய் கிஷோரும் இணைந்து 147 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த சாய் கிஷோர் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த தொடக்க வீரர் ஜெகதீஷன் 102 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் 37 பந்தில் 44 ரன்களும், பாபா இந்திரஜித் 24 பந்தில் 31 ரன்களும் அடித்து சிறிய பங்களிப்பு செய்தனர். தமிழ்நாடு அணியின் ஃபினிஷரான ஷாருக்கான், வழக்கம்போலவே சிக்ஸர் மழை பொழிந்து சிறப்பாக ஃபினிஷ் செய்து கொடுத்தார். ஷாருக்கான் எதிர்கொண்ட 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 6  சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஷாருக்கானின் ஃபினிஷிங்கால் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 354 ரன்களை குவித்து, 355 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை கர்நாடகாவுக்கு நிர்ணயித்துள்ளது.

அந்த கடின இலக்கை கர்நாடகா அணி விரட்டிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

U-19 ஆசிய கோப்பை: மீண்டும் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி, குறைந்த பந்துகளில் சதம் விளாசல்
Ind Vs Pak டி20 உலகக் கோப்பை: வெறும் ரூ.100க்கு விற்கப்படும் டிக்கெட்டுகள்.. நீங்க வாங்கீட்டீங்களா.?