கிரிக்கெட்டில் முன்பு இல்லாத வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட விளையாட்டு வீரர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தின் புதிய வலை பயிற்சி அரங்கை இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவியோடு திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைப்பயிற்சியில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு தனது கையெழுத்திட்டும், செல்ஃபி புகைப்படம் எடுத்தும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
அவுட்டுன்னு நடையை கட்டிய ஆஸி வீரர்கள், சிராஜ் கேட்ட ரெவியூவால் திரும்ப வந்து பந்து வீசிய க்ரீன்!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன் தமிழகத்தின் முன்பு இல்லாத அளவிற்கு தற்போது வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் இதனை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு தன்னைப் போன்ற கிராமப்புற பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வர வேண்டும் எனவும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் தேர்வாக வேண்டும் என்பது எனது விருப்பம் எனவும், 20 ஓவர் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் என பிரித்துப் பார்க்க முடியாது.
ஒவ்வொன்றும் தனித்துவமானது. எப்பொழுதும் டெஸ்ட் போட்டியில் தான் திறமையை நிரூபிக்க முடியும். நான் கிரிக்கெட்டில் வந்த காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை தற்பொழுது வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற விளையாட்டுக்கள் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. டிஎன்பிஎல் மூலமாக 13 பேர் ஐபிஎல் போட்டியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ளனர். வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவிச் செயலாளர் பாபா, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.