கேமரூன் க்ரீன் ஓவரில் இந்திய வீரர் முகமது சிராஜிற்கு நடுவர் அவுட் கொடுக்க, ஆஸி வீரர்கள் நடையை கட்டினர். ஆனால், டிஆர்எஸ் முறையில் ரெவியூ எடுக்க பந்து பேட்டில் பட்டது தெரிந்து மீண்டும் திரும்ப வந்தனர்.
இந்தியாவிற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். கேஎஸ் பரத் 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து அஜிங்கியா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா ஃபாலோ ஆன் தவிர்க்குமா என்று எதிர்பார்த்த நிலையில், ஃபாலோ ஆனையும் தவிர்த்து 296 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில், அஜிங்கியா ரஹானே 89 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்திற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போதும் ரஹானே தான் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இதே போன்று ஷர்துல் தாக்கூரும் 3ஆவது முறையாக ஓவல் மைதானத்தில் தொடர்ந்து அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சாப்பாட்டு பிளேட்டோடு இருந்த தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு விராட் கோலி ரிப்ளை!
ரஹானே, தாக்கூர், உமேஷ் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்கவே, கடைசியாக வந்த சிராஜிற்கு கேமரூன் க்ரீன் ஓவரில் நடுவர் எல்பிடபிள்யூவிற்கு அவுட் கொடுத்தார். இதன் காரணமாக பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆஸி, வீரர்கள் அவ்வளவு தான் எல்லா விக்கெட்டும் முடிந்துவிட்டது என்று நடையை கட்டினர். அப்போது இந்தியா 293 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால், முகமது சிராஜ் ரெவியூ எடுக்கவே, பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து திரும்ப வந்த ஆஸி, வீரர்கள் மறுபடியும் பந்து வீசினர். எனினும், அதன் பிறகு இந்தியா 3 ரன்கள் மட்டுமே எடுத்து 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Umpire gives Siraj out, and all the Australian players went back to the dressing room but there was an edge and Siraj survives.
Total comedy stuff. pic.twitter.com/31IfzNOssX