Vijay Hazare Trophy: பவுலிங்கில் பட்டைய கிளப்பிய சிலம்பரசன்..! பெங்காலை வீழ்த்தி தமிழ்நாடு அணி ஹாட்ரிக் வெற்றி

Published : Dec 11, 2021, 06:20 PM IST
Vijay Hazare Trophy: பவுலிங்கில் பட்டைய கிளப்பிய சிலம்பரசன்..! பெங்காலை வீழ்த்தி தமிழ்நாடு அணி ஹாட்ரிக் வெற்றி

சுருக்கம்

விஜய் ஹசாரே தொடரில் பெங்கால் அணியை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.  

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய தமிழ்நாடு அணி, 2வது போட்டியில் கர்நாடகாவை வீழ்த்தியது. இன்று நடந்த 3வது போட்டியில் பெங்காலை எதிர்கொண்டு ஆடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் அபாரமாக பேட்டிங் ஆடி 87 ரன்களை குவித்தார். பாபா இந்திரஜித் 64 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய கௌஷிக், 31 பந்தில் 50 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு அணியின் ஃபினிஷர் ஷாருக்கான் வழக்கம்போலவே அதிரடியாக ஆடி 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் விளாச, தமிழ்நாடு அணி 50 ஓவரில் 295 ரன்களை குவித்தது.

296 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பெங்கால் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் ஒரு வீரர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு வெளியேறியதையடுத்து 40வது ஓவரில் வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, இந்த தொடரில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய தமிழ்நாடு அணியின் மிதவேகப்பந்துவீச்சாளர் சிலம்பரசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!